×

மஷ்ரூம் 65

தேவையான பொருட்கள்:

காளான் – 200 கிராம்
எண்ணெய் – 1/2 லிட்டர்
சோள மாவு – 1 1/2 மேசைக்கரண்டி
மல்லி தூள் – 1/2 தேக்கரண்டி
கடலை மாவு – 2 மேசைக்கரண்டி
அரிசி மாவு – 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

200 கிராம் காளானை மண் இல்லாதவாறு சுத்தமாக கழுவி தனியாக வைத்து கொள்ளவும். இப்போது 65 மசாலாவை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
காளான் 65 செய்வதற்கு முதலில் ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளவும். அவற்றில் இரண்டு மேசைக்கரண்டி கடலை மாவு, சோள மாவு1 1/2 மேசைக்கரண்டி, அரிசி மாவு 1 மேசைக்கரண்டி, மிளகாய் தூள் இரண்டு தேக்கரண்டி, மல்லி தூள் 1/2 தேக்கரண்டி, மிளகு தூள் 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி மற்றும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.
முக்கிய குறிப்பு மாவானது தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.பின்பு பிசைந்த மாவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள காளானை சேர்த்து திரும்பவும் ஒரு முறை நன்றாக பிசைந்து 15 நிமிடங்கள் நன்றாக ஊற வைக்க வேண்டும்.

The post மஷ்ரூம் 65 appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...