×

ஆலு சாட் மசாலா

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 500 கிராம் (தோலை நீக்கி சதுர வடிவில் வெட்டி கொள்ளவும்)
காஷ்மீர் மிளகாய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த மாங்காய் பொடி – 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி – 1/2 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா – 1/2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
புளிக் கரைசல் சட்னி -1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி புதினா சட்னி – 1/2 டேபிள் ஸ்பூன்
ஓமப் பொடி (சேவ்) – தேவையான அளவு
கொத்த மல்லி நறுக்கியது – தேவையான அளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
மாதுளை – அலங்காரத்திற்கு

செய்முறை :

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சதுர வடிவில் உள்ள உருளைக் கிழங்கை போட்டு நன்றாக வதக்க வேண்டும். உருளைக்கிழங்கு பொன்னிறமாக மாறியதும் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும். பிறகு ஆம்சூர் பொடி, சாட் மசாலா மற்றும் சீரகப் பொடி போன்றவற்றை சேர்க்க வேண்டும் பிறகு லெமன் ஜூஸ் கலந்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு புளி கரைசல் மற்றும் கொத்தமல்லி புதினா சட்னி இவற்றை கலக்கவும் இப்பொழுது சேவுகளை அப்படியே அதன் மேல் தூவி நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் மாதுளை விதைகளையும் தூவி அலங்கரிக்கவும். இறுதியில் இரண்டு சட்னிகளையும் அதன் மேல் வைத்தால் சூப்பரான ஆலு சாட் ரெசிபி ரெடி

The post ஆலு சாட் மசாலா appeared first on Dinakaran.

Tags :
× RELATED சைனீஸ் காளான் சூப்