×

உத்தரகாண்ட் மாநிலத்தில் கோவிலுக்கு சென்ற பக்தர்களின் கார் பள்ளத்தில் விழுந்து 9 பேர் உயிரிழப்பு : 2 பேர் காயம்

 

உத்தரகாண்ட்: பித்தோராகர் மாவட்டம் முனிசியாரி பிளாக்கில், கார் ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளார். 2 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளனர். விபத்துக்குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்ற பக்தர்கள் நிரம்பிய எஸ்யூவி வாகனம் பித்தோராகரில் ஆழமான பள்ளத்தில் விழுந்து ஒன்பது பேர் பலி, இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

பாகேஷ்வர் மாவட்டத்தின் ஷாமா கிராமத்தைச் சேர்ந்த இந்த பக்தர்கள் ஹோக்ராவில் அமைந்துள்ள கோகிலா தேவி கோயிலுக்குச் செல்லவுள்ளனர். காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. புதன்கிழமை இரவு பெய்த கடும் மழையினால் வீதி மிகவும் மோசமடைந்ததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக திதிஹாத் துணை ஆட்சியர் அனில் குமார் சுக்லா தெரிவித்தனர். நேற்று இரவு பெய்த கனமழையால், சாலையில் குப்பைகள் குவிந்ததால், சாலையில் இடம் குறுகலாக இருந்ததால், வாகனம் விபத்தில் சிக்கியிருக்கலாம்.

The post உத்தரகாண்ட் மாநிலத்தில் கோவிலுக்கு சென்ற பக்தர்களின் கார் பள்ளத்தில் விழுந்து 9 பேர் உயிரிழப்பு : 2 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Uttarakhand Uttarakhand ,Munisiyari ,Pithoragarh district ,Uttarakhand ,Dinakaran ,
× RELATED கற்றல் விளைவு பணித்திறன் மேம்பாட்டு...