×

வள்ளலாரை சனாதனத்திற்கு இழுப்பது ஆளுநரின் அறியாமையை காட்டுகிறது: அமைச்சர் சேகர்பாபு காட்டம்

வேலூர்: வள்ளலாரை சனாதனத்திற்கு இழுப்பது ஆளுநரின் அறியாமையை காட்டுகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர், காழ்ப்புணர்ச்சியால் சனாதன தர்மத்தை சிலர் தவறாக நினைக்கின்றனர் என்றும் கூறினார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அமைச்சர் சேகர்பாபு தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பொது உடைமை, பொது அறிவை தந்தவர் வள்ளலார்.

நாட்டிற்கு பொது உடைமை, பொது அறிவை தந்து, இயற்கை மருத்துவத்தையும் தந்த மாமனிதர் வள்ளலார். வள்ளலாரை சனாதனத்திற்கு இழுப்பது ஆளுநரின் அறியாமையை காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் அறநிலையத்துறையில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அறநிலையத்துறையில் 38 மாவட்டங்களுக்கும் அறங்காவலர்களை நியமித்தது இதுவே முதல்முறை. அறங்காவலர் குழு நியமனத்தை உச்சநீதிமன்றமே பாராட்டியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 1,660 கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

The post வள்ளலாரை சனாதனத்திற்கு இழுப்பது ஆளுநரின் அறியாமையை காட்டுகிறது: அமைச்சர் சேகர்பாபு காட்டம் appeared first on Dinakaran.

Tags : Sanathana ,Minister ,Shekharbabu ,Kattam ,Vellore ,Hindu Religious Endowments ,Sanatana… ,Sanatana ,Shekharbabu Kattam ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...