×

தேசிய பருவநிலை ஆராய்ச்சி பரிசோதனை மையத்தில் வேலை

ஒன்றிய அரசின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கீழ் இயங்கும் தேசிய பருவநிலை ஆராய்ச்சி பரிசோதனை மையத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோ இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Research Fellow (JRF): 11 இடங்கள். தகுதி: Physics/Radio Physics/Atmospheric Science/Space Physics/ Meteorology/Applied Chemistry/Geo Physics/Earth System Sciences அல்லது Physics or Atmospheric Science or Space Physics or Meteorology ஆகிய பாடங்களில் 65% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் முதுநிலை பட்டம் அல்லது Electronics Engineering/Communication Engineering/Optical Engineering/Photonics/Instrumentation Engineering ஆகிய பாடங்களில் எம்.இ., மற்றும் சிஎஸ்ஐஆர்- யுஜிசி நெட்/கேட்/ ஜேஏஎம்/ஜேஇஎஸ்டி ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஜூனியர் பெல்லோஷிப்பின் போது கல்வி உதவித் தொகையாக முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் ₹31 ஆயிரமும், அதன் பின்னர் மாதம் ₹35 ஆயிரமும் வழங்கப்படும்.

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.narl.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.06.2023.

The post தேசிய பருவநிலை ஆராய்ச்சி பரிசோதனை மையத்தில் வேலை appeared first on Dinakaran.

Tags : National Climate Research Experiment Center ,National Climate Research Experiment Centre ,Indian Space Research Centre ,Union Government ,Dinakaran ,
× RELATED நான் தலைமை பொறுப்புக்கு வருவதை சிவன்...