×

பொலிவியாவில் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டம்; சூரிய கடவுளை வரவேற்று வழிபாடு..கைகளை உயர்த்தி உற்சாகம்..!!

பொலிவியா: பொலிவியா மக்கள் புத்தாண்டை சூரிய கடவுளை வரவேற்று வழிபாடு நடத்தினர். புத்தாண்டு தினமான நேற்று பொது இடங்களில் மக்கள் கூடி கதிரவன் உதயம் ஆனதும் முதல் கதிர்களை கைகளை உயர்த்தி வரவேற்று வணக்கம் செலுத்தினர். நெருப்பை வளர்த்த பொலிவியா மக்கள் அதனை வலம் வந்து நடனமாடியும் மகிழ்ந்தனர். புத்தாண்டு தினத்தில் கதிரவனை வணங்கினால் ஆரோக்கியம் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் சோம்பலின்றி உழைப்பதற்கான சக்தி கிடைக்கும் என்றும் பொலிவிய மக்கள் நம்புகின்றனர்.

மேலும் பொலிவிய மக்கள் புத்தாண்டு அன்று நாணயங்களை கேக்குகளுக்குள் வைத்து சமைக்கிறார்கள். இப்போது யார் இந்த நாணயங்களை தங்கள் துண்டுகளில் கண்டாலும் அவர்கள் அடுத்த ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள் என்று நம்புகிறார்கள்.

The post பொலிவியாவில் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டம்; சூரிய கடவுளை வரவேற்று வழிபாடு..கைகளை உயர்த்தி உற்சாகம்..!! appeared first on Dinakaran.

Tags : New Year ,Bolivia ,God ,New Year's Day ,
× RELATED இஸ்லாமியப் புத்தாண்டு!