×

1000 கி.மீ. பாய்மரப் படகு பயணம் குமரி பெண் காவலர்களுக்கு பாராட்டு

நாகர்கோவில், ஜூன் 22: தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்களின் 50-வது பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் ஒரு பகுதியாக மகளிர் காவலர்கள் மட்டும் பங்கு பெற்ற சென்னை பழவேற்காடு முதல் கோடியக்கரை சென்று மீண்டும் சென்னை திரும்பும் வகையில் சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவு பாய்மர படகு பயணத்தை கடந்த 10.6.2023 அன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பயணமானது 17.6.2023 அன்று 1000 ஆயிரம் கிலோமீட்டர் பாய்மரப் படகு பயணம் செய்து சென்னை துறைமுகம் வந்தடைந்தது.

இதில் கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் குரு கிருத்திகா, முதல் நிலை பெண் காவலர் சோனியா காந்தி மற்றும் பெண் காவலர் மஞ்சு ஆகியோரும் பங்கேற்றனர். ஆயிரம் கிலோமீட்டர் பாய்மர படகு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நேற்று குமரி மாவட்டம் வந்த இவர்கள் மூவரையும் எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். இந்த பயணம் குறித்து அவர்கள் கூறுகையில், தமிழ்நாடு காவல் துறையில் மகளிர் காவலர்களின் 50 வது பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு 1000 கிலோ மீட்டர் தொலைவு 8 நாட்கள் பாய்மரப்படகு பயணம் செய்தது புதிய அனுபவத்தை தந்தது. பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள். குறிப்பாக காவல்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர். அந்த வகையில் இந்த பயணம் மிகப்பெரிய நம்பிக்கை தந்திருக்கிறது என்றனர்.

The post 1000 கி.மீ. பாய்மரப் படகு பயணம் குமரி பெண் காவலர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,50th Golden Jubilee celebrations ,Women Constables ,Tamil ,Nadu Police ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...