×

ஆகாஷ் இன்ஸ்டிடியூட்டில் படித்து டாப் 10 இடங்களை பிடித்தது எப்படி? நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் பேட்டி

சென்னை, ஜூன் 22: ஆகாஷ் இன்ஸ்டிடியூட்டில் படித்து டாப் 10 இடங்களை பிடித்தது எப்படி என நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் தங்கள் அனுபவங்கள் குறித்து கூறினர். 2023ம் ஆண்டுக்கான நீட் தேர்வில், ஆகாஷ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 145 மாணவர்கள் 700க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றனர். அவர்களில் 109 பேர் ஆகாஷ் பயிற்சி மையத்தின் நேரடி வகுப்புகளில் பயிற்சி பெற்றவர்கள். மேலும் 57 மாணவர்கள் நீட் தேர்வில் முதல் 100 இடங்களை பிடித்து சாதித்துள்ளனர். இவர்களில் 30 பேர் முதல் 50 இடங்களை பிடித்துள்ளனர். குறிப்பாக, சூர்யா சித்தார்த் (அகில இந்திய ரேங்க் 6) மற்றும் ஸ்வயம் சக்தி (அகில இந்திய ரேங்க் 8) ஆகிய இருவரும் ஆகாஷ் கல்வி நிறுவனத்தின் மூலம் நீட் தேர்வில் சிறந்த மாணவர்களாக உருவாகியுள்ளனர். அவர்களின் பயணம், அவர்களின் அனுபவம் மற்றும் பயிற்சியிடையே அவர்கள் பெற்ற மதிப்புமிக்க நுண்ணறிவுகள் குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளன. மேலும் சில மாணவர்கள் தங்கள் அனுபவங்களையும் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் பேட்டி வருமாறு: மாணவன் கவுஸ்தவ்: நான் 9ம் வகுப்பில் படிக்கும் போது அறிவியலில், குறிப்பாக உயிரியலில் எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. மனித உடலைப் பற்றியும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் அறிந்து கொள்ளும் போது, அந்த பாடத்தின் மீது எனக்கு ஆர்வம் உண்டாகி ஈர்க்கப்பட்டேன். எனது தந்தை ஒரு பொறியாளர். ஆனால் அவர் என்னை ஒரு மருத்துவராக தொழில் செய்ய ஊக்குவித்தார். நீட் தேர்வுக்கு தயாராக முடிவு செய்த பிறகு ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் சேர வேண்டும் என்று முடிவு எடுக்க காரணம், அதன் சாதனைகள் குறித்த பதிவுகளை கேள்விப்பட்டேன். எனது குடும்பத்தினரும் நண்பர்களும் ஆகாஷ் கல்வி நிறுவனத்தை பரிந்துரை செய்தனர். அங்குள்ள ஆசிரியர்களும் நான் எடுத்த முடிவுக்கு மற்றொரு காரணம். ஆகாஷ் கல்வி நிறுவனம் ஒரு ஆதரவான சூழ்நிலையை எனக்கு வழங்கியதுடன், நீட் தேர்வுகளில் உள்ள பிரச்னைகளில் இருந்து எங்களை விடுவித்தது. எங்களிடம் உள்ள குறைகளை நீக்கி வலுப்படுத்த, ஆசிரியர்களிடம் நேரடியாக பேச வைத்து, சந்தேகங்களை போக்கினர். நீட் தேர்வுகளில் உள்ள பெரிய அளவிலான பிரச்னைகளில் இருந்து அது எங்களை விடுவித்தது. அதனால் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற உதவியது.

மாணவன் துருவ்: நீட் தேர்வில் கர்நாடகாவில் முதலிடம் பிடித்து அகில இந்திய அளவில் 5வது இடத்தை பிடித்துள்ளேன். என்னால் இன்னும் அதை நம்ப முடியவில்லை. இது எனது கனவு, அது நனவாகியுள்ளது. நான் இரண்டு வருடங்களாக அயராது உழைத்தேன். இந்த சாதனை எனது எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது. என் தாயாரின் நண்பரின் பரிந்துரையின் பேரில் ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். நாங்கள் ஒரு முறை ஆகாஷ் கல்வி நிறுவனத்துக்கு சென்றோம். அங்குள்ள கட்டமைக்கப்பட்ட ஆய்வு தொகுப்புகள் மற்றும் விரிவான புத்தகங்கள் என்னை ஈர்த்தது. வகுப்பறை அனுபவம் மேலும் என்னை கவர்ந்தது. அதனால் ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். ஆசிரியர்களும் அவர்களின் கற்றுக்கொடுக்கும் முறைகளும், மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டியது.

மாணவன் சூர்யா: நீட் 2023ல் நீங்கள் அகில இந்திய அளவில் 6வது இடம் பிடித்துள்ளேன். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துக்கு காரணம், எனது தந்தை ஒரு டாக்டர். அதனால் அந்த படிப்பில் சேர என்னை தூண்டினார். மக்கள் வாழ்வில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை பார்த்ததும், அவரின் பாதையில் செல்ல தூண்டியது. நான் 11ம் வகுப்பின் தொடக்கத்திலேயே ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். அது ஒரு அற்புதமான அனுபவம். அங்குள்ள ஆசிரியர்கள் மற்றவர்களைவிட வேறுபட்டவர்கள். மேலும், ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் வழங்கப்பட்ட பாடப் பொருட்கள் உயர் தரத்தில் இருந்தன. ஒரே ஒரு பாடத் தொகுதிக்கு பதிலாக, என்சிஇஆர்டி உள்ளிட்ட 2 முதல் 3 புத்தகங்களை கொடுத்தனர். அந்த புத்தகங்கள் உண்மையிலேயே நீட் தேர்வுக்கு உதவியாக இருந்ததை அறிந்தேன்.

நீட் தேர்வுக்கு தயாராவதற்கு முன்னதாக, விளையாட்டுகள் மற்றும் டிவி பார்ப்பது போன்றவற்றை தவிர்ப்பதுடன் ஒழுக்கத்தின் முக்கியத்துவம், கவனச் சிதறல்களை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் நான் உணர்ந்தேன். அதனால் அவற்றை நீக்கி படிப்பதில் கவனம் செலுத்தியதால் ஒரு பயனுள்ள ஆய்வு முறையை உருவாக்க முடிந்தது. இந்த அம்சங்கள் நீட் தேர்வுக்கு தயாராவதற்கு முக்கியமாக இருந்தன. மேலும் 11ம் வகுப்பின் தொடக்கமே வெற்றிக்கான வலுவான அடித்தளத்தை அமைக்க உதவியாக இருக்கிறது.

மாணவன் ஸ்வயம் சக்தி: ஒடிசாவில் முதலிடம் பிடித்துள்ளேன். எனது குடும்பத்தில் அனைவரும் பொறியியல் படித்தவர்கள். அதனால் வேறு பாதையில் செல்ல விரும்பினேன். மருத்துவம் மூலம் மக்களுக்கு சேவை செய்வதின் நேரடி தாக்கம் என்னை மருத்துவம் படிக்க ஊக்கப்படுத்தியது. ஆகாஷில் நான் சவால்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் எனது இயற்பியல் மற்றும் வேதியியல் ஆசிரியர்கள் எனது வழிகாட்டிகளாக செயல்பட்டனர். அவர்கள் பல தீர்வுகளை கொடுத்தனர். படிப்பதற்காக நேரம் ஒதுக்கிக் கொடுத்தனர். கல்வி மற்றும் கல்வி சாரா தடைகளை சமாளிக்க எனக்கு உதவியாக இருந்தனர். இவ்வாறு நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள் தெரிவித்தனர். துருவ், சுபம், சூர்யா மற்றும் ஸ்வயம் ஆகியோரின் வெற்றிக் கதைகள் நீட் பயணத்தைப் பற்றிய விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளையும், அவர்களின் சாதனைகளை கட்டமைப்பதில் ஆகாஷ் கல்வி நிறுவனம் வழங்கிய பங்களிப்பும் முக்கியமானது. நன்கு கட்டமைக்கப்பட்ட ஆய்வுப் பொருட்கள் தொடங்கி அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகள் வரை உள்ள அனைத்து அம்சங்களும் இந்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற ஆகாஷ் கல்வி நிறுவனமும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது என்பதை புலப்படுத்துகிறது.

The post ஆகாஷ் இன்ஸ்டிடியூட்டில் படித்து டாப் 10 இடங்களை பிடித்தது எப்படி? நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Akash Institute ,Chennai, ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்