×

சோழவந்தானில் திமுக அரசின் சாதனை விளக்க பிரசார கூட்டம்

சோழவந்தான், ஜூன் 22: சோழவந்தானில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக திமுக அரசின் சாதனை விளக்க தெரு முனை பிரசார கூட்டம் நடைபெற்றது. பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் ஜெயராமன், பொதுக்குழு தர், மாவட்ட இளைஞரணி வெற்றிச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் இளைஞரணி காளிதாஸ் வரவேற்றார்.

இதையடுத்து தலைமைக் கழக பேச்சாளர் அலெக்சாண்டர், ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் ஆகியோர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு, சிறப்புரையாற்றினர். இதில் பேரூர் அவைத் தலைவர் தீர்த்தம்,பொருளாளர் கண்ணன், துணைச் செயலாளர்கள் கொத்தாளம் செந்தில், ஸ்டாலின், செல்வராணி ஜெயராம் மற்றும் நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post சோழவந்தானில் திமுக அரசின் சாதனை விளக்க பிரசார கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Dizhagam Government ,Cholhavandan ,Vadippatti South Union ,Dizhagam Youth ,Dijagam Government ,Solhavandan ,Dinakaran ,
× RELATED சோழவந்தானில் கிருஷ்ணர், ராதை திருக்கல்யாணம் பக்தர்கள் திரண்டனர்