×

பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

 

திருமங்கலம், ஜூன் 22: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள பெரியசுரைக்காய்பட்டியை சேர்ந்தவர் தர்மர். இவரது மனைவி விக்னேஸ்வரி(37). இவர் திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டி அரசுஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பணி முடிந்து ராஜபாளையம் செல்ல பஸ் ஏற டி.புதுப்பட்டி பஸ் ஸ்டாப்பிற்கு நடந்து சென்றார்.

அப்போது டூவிலரில் வந்த இரண்டு மர்ம நபர்களில் பின்னால் அமர்ந்து வந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் விக்னேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 3.5 பவுன் நகையை பறித்து கொண்டு டூவீலரில் தப்பியோடிவிட்டார். இது குறித்து விக்னேஸ்வரி கொடுத்த புகாரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து டூவீலரில் வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post பெண் ஊழியரிடம் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirumangalam ,Periasuraikaipatti ,Rajapalayam ,Virudhunagar district ,Vigneswari ,
× RELATED அதிமுக அணையா விளக்கு ஜெயலலிதா ஆன்மா...