×

திமுக மாணவரணி ஆலோசனை கூட்டம்

 

சிவகங்கை, ஜூன் 22: திருப்புவனத்தில் ஒன்றிய, நகர திமுக மாணவரணி ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கதிர் ராஜ்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி, நகர் செயலாளர் நாகூர்கனி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் தீர்மானங்களை விளக்கி பேசினார். மாணவரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் மாணவரணி சார்பில் ஏராளமானோர் கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர்கள் காளிதாஸ், பாண்டியகிருஷ்ணன், நகர் மாணவரணி அமைப்பாளர் விஜய், துணை அமைப்பாளர்கள் விஜயகுமார், கலைச்செல்வன், அப்துல்முனாப், நவநீதகண்ணன், மணிகண்டபிரபு, லட்சுமணன் மற்றும் ருக்மாசரவணன், பிள்ளையார்பட்டி சதீஷ், சோமசுந்தரம் மற்றும் மாணவரணியினர், கட்சியினர் கலந்துகொண்டனர்.

The post திமுக மாணவரணி ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Sivagangai ,Union ,student council ,Thirupuvanam ,DMK student council ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்