×

11ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு வெளியீடு

 

சிவகங்கை, ஜூன் 22: 11ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதி மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘‘2023, மார்ச், ஏப்ரலில் 11ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வெழுதி மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்த தேர்வர்களுக்கான மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், மேற்கண்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 11ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Class Reunion ,Sivagangai ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் மஞ்சுவிரட்டு: ஐகோர்ட் கிளை அனுமதி