×

இஸ்ரேல், பாலஸ்தீனம் மோதல்: 9 பேர் பலி

ஜெருசலேம்: இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. மேற்குக்கரை நகரமான வடக்கு ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் 2 நாட்களுக்கு முன் தாக்குதல் நடத்தியதில், 3 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பழி வாங்கும் விதமாக மேற்குக்கரையில் இஸ்ரேலிய குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள உணவகம் மற்றும் எரிவாயு நிலையத்தின்மீது பாலஸ்தீனியர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட பாலஸ்தீனியர்கள் 2 பேரை இஸ்ரேல் ராணுவம் சுட்டு கொன்றது.

The post இஸ்ரேல், பாலஸ்தீனம் மோதல்: 9 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Israel-Palestine conflict ,Jerusalem ,Israel ,Palestine ,West Bank ,North Jenin ,Israel-Palestine ,Dinakaran ,
× RELATED ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும்...