×

ஒன்றிய அரசை எதிர்ப்பதால் அழுத்தம் அதிமுகவை போல திமுகவையும் அடிமைப்படுத்த நினைத்தால் நடக்காது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

மயிலாடுதுறை: அதிமுகவை போல திமுகவையும் ஒன்றிய பாஜ அரசு அடிமைப்படுத்த நினைத்தால் நடக்காது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். மயிலாடுதுறையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இங்கு தொடங்கிய எனது பிரச்சாரம் தான் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து திமுக ஆட்சி அமைக்க அடித்தளமிட்டது. நம்முடைய முதல்வர் சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார். இதை பொறுக்காத ஒன்றிய அரசு, என்ன செய்வது என்று தெரியாமல் இ.டி., ஐ.டி, சி.பி.ஐ., மூலம் அச்சுறுத்தி வருகிறது. நாங்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை சந்தித்தவர்கள். இதற்கெல்லாம் அச்சப்பட மாட்டோம்.

இ.டி., மோடியை பார்த்து திமுக காரன் பயப்பட மாட்டான். அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து நமது முதல்வர் ஒன்றிய அரசை எதிர்ப்பதால் இதுபோன்ற அழுத்தத்தை மோடி அரசு கொடுக்கிறது. ஒன்றிய பாஜக மற்றும் அதிமுகவால் திமுகவில் உள்ள சாதாரண கிளை செயலாளரை கூட தொட்டு பார்க்க முடியாது. ஆளுநர் ஆர்.ஏன்.ரவி, தனக்கு கொடுத்த வேலையை விட்டுவிட்டு, கொடுக்காத வேலைகளையும் செய்து வருகிறார். தமிழ்நாட்டின் பெயரை ஆளுநர் மாற்ற நினைக்கிறார். ஆளுநருக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்தவர் தான் நமது முதலமைச்சர் ஸ்டாலின்.

ஒன்றிய அரசு அதிமுகவை தங்கள் அடிமை கட்சியாக வைத்துள்ளது. அதேபோல் திமுகவையும் அடிமைப்படுத்த நினைத்தால் நடக்காது. என்னை சின்னவர் என்று பட்டப்பெயர் வைத்து அழைக்காதீர்கள். நான் உண்மையாகவே அரசியல் அனுபவம் உள்ளிட்டவை அனைத்திலும் சின்னவன்தான். அந்த பட்ட பெயரை தவிர்த்து விட்டு, கலைஞர் வைத்த அழகான உதயநிதி என்ற பெயரை கூறி அழைத்தாலே போதும். இவ்வாறு அவர் பேசினார். உலகின் பணக்கார பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள அதானி, மோடியின் நெருங்கிய நண்பர். பிரதமர் மோடி எந்த நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றாலும் விமானி இல்லாமல் கூட செல்வார். அதானி இல்லாமல் செல்ல மாட்டார்.

* ஜாலியாக போகும் அமலாக்கத்துறை ரெய்டு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ‘பாஜ, திமுகவை தொடர்ந்து எதிர்ப்பது, திமுக நல்ல பாதையில் போய் கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். ஒட்டுமொத்த தமிழகமே பாஜவை எதிர்க்கத்தான் செய்யும். எந்த காலத்திலும் பாஜவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்றார். அமலாக்கத்துறை சோதனையை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேட்டதற்கு, ஜாலியாக போய் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

The post ஒன்றிய அரசை எதிர்ப்பதால் அழுத்தம் அதிமுகவை போல திமுகவையும் அடிமைப்படுத்த நினைத்தால் நடக்காது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Union State ,Divagar ,Minister ,Udhayanidhi Stalin ,Mayeladuthur ,Union Baja Government ,Dinakaran ,Udhayanidi Stalin ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...