×

கல்வியை தந்த பள்ளிக்கு விவசாயியின் மனிதநேயம்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே களப்பாலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இதே ஊரில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும், சங்கரன்கோவிலை அடுத்த நெற்கட்டும்செவல் கிராமத்தை சேர்ந்த ரம்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த 8ம் தேதி திருமணம் நடந்தது. கடந்த திங்கட்கிழமை மனைவியுடன் தான் படித்த பள்ளிக்கு சென்ற பாலமுருகன், தலைமை ஆசிரியர் சாலமன், உதவி தலைமை ஆசிரியை அனிதா ஆகியோரிடம் 100 மரக்கன்றுகள், 4 மின்விசிறிகள் மற்றும் பள்ளியில் படித்து வரும் 35 மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டுகள் என சீர்வரிசை பொருட்களை வழங்கி அசத்தினார். மாணவர்களிடையே சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையிலும் பள்ளி வளாகத்தில் மனைவியுடன் சேர்ந்து மரக்கன்று நட்டு வைத்தார். அவருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சக விவசாயிகள் வாழ்த்து தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post கல்வியை தந்த பள்ளிக்கு விவசாயியின் மனிதநேயம் appeared first on Dinakaran.

Tags : Balamurugan ,Kalappalangulam ,Kalgakumalai ,Thoothukudi ,Shankaran ,Dinakaran ,
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்