×

அதிகாரி சட்டையை பிடித்து ‘பளார்’ விட்ட பெண் எம்எல்ஏ

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் மீரா-பயந்தர் தொகுதி சுயேச்சை பெண் எம்எல்ஏவும், முன்னாள் மேயருமான கீதா ஜெயின் என்பவர், மாநகராட்சி பொறியாளர் ஒருவரின் சட்டையை பிடித்து கன்னத்தில் பளார் என்று அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பருவமழை தொடங்கி உள்ள நிலையில் குறிப்பிட்ட இடங்களில் இருக்கும் கட்டிடங்களை இடித்ததற்காக, மாநகராட்சியின் இரண்டு பொறியாளர்களை திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த பெண் எம்எல்ஏ, ‘கட்டிடங்களை இடிப்பதற்கான முன்அனுமதியை காட்டுங்கள். உங்களுக்கு இந்த அதிகாரம் இல்லை’ என்று கூறி, பொறியாளர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார்.

The post அதிகாரி சட்டையை பிடித்து ‘பளார்’ விட்ட பெண் எம்எல்ஏ appeared first on Dinakaran.

Tags : MLA ,Meera-Bayander ,Constituency ,Thane District ,Maharashtra ,Geeta Jain ,Corporation ,
× RELATED விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி...