×

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு 1 டிஎம்சி கிருஷ்ணா நீர் வந்தது

சென்னை: ஆந்திரா- தமிழக அரசு ஒப்பந்தப்படி ஒரு டிஎம்சி கிருஷ்ணா நீரை அம்மாநில அதிகாரிகள் விடுவித்துள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா-தமிழக நதிநீர் ஒப்பந்தத்தின்படி ஆண்டுதோறும், ஆந்திர அரசு தமிழகத்துக்கு 15 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். தெலுங்கு, கங்கா ஒப்பந்தத்தின்படி கண்டலேறு அணையில் 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடலாம். இந்நிலையில், தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் மே 1ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு முதலில் 500 கன அடியும், அதன்பின்னர் படிப்படியாக 2 ஆயிரம் கன அடியாகவும் தற்போது 2,450 கன அடியாகவும் தண்ணீர் திறந்துவிட்டனர். இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை – தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு கடந்த 3ம் தேதி வந்தடைந்தது. கடந்த மே மாதம் 12ம் தேதி தமிழக எல்லையான ஜீரோ பாயின்டில் 375 கன அடி தண்ணீர் வந்தது.

அதன் பிறகு கடந்த 15ம் தேதி 185 கன அடியாகவும் 17ம் தேதி 160 கன அடியாகவும் தண்ணீர் குறைந்தளவே வந்தது. ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்திரி பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் திருப்பிவிட்டதால் இந்த தண்ணீர் அளவு குறைந்தது. இந்த நிலையில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள், ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகளிடம், ‘தண்ணீர் குறைந்தளவு வருவதால் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சில நாட்களுக்குமுன் விவசாயிகளுக்காக திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகத்துக்கு திருப்பிவிடப்பட்டது. இதன்காரணமாக கடந்த வாரம் தண்ணீர் ஜீரோ பாயிண்டில் 340 கன அடியாகவும் நேற்று மழைநீருடன் சேர்த்து 562 கன அடியாகவும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. கடந்த மே 1ம் தேதி முதல் இதுவரை தமிழகத்துக்கு 1000 மில்லியன் கன அடி அதாவது 1 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது.

The post கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு 1 டிஎம்சி கிருஷ்ணா நீர் வந்தது appeared first on Dinakaran.

Tags : TMC ,Krishna water ,Tamil Nadu ,Kandaleru Dam ,CHENNAI ,Andhra-Tamil Nadu government ,TMC Krishna ,
× RELATED புழல் ஏரியில் நீர் இருப்பு 3 டிஎம்சியாக அதிகரிப்பு