×

உங்களில் என்னையும் என்னில் உங்களையும் காண்பது சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

வடலூர்: ஆன்மிகத்தில் உயர்ந்த நாடு இந்தியா என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி; சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களை படித்தவன்; வள்ளலாரின் நூல்களை படித்தபோது மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியது. 10,000 வருடம் பழைமைவாய்ந்த சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். அறியாமை, காழ்ப்புணர்வால் சனாதன தர்மத்தை சிலர் தவறாக நினைத்துள்ளனர். உங்களில் என்னையும் என்னில் உங்களையும் காண்பது சனாதன தர்மம்.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்னும் வள்ளலாரின் வரிகள் சனாதன தர்மத்தின் எதிரொலி; சனாதன தர்மத்தை ஏற்றாலும் எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள் தான் இருப்பார்கள். ஆன்மிகத்தில் உயர்ந்த நாடு இந்தியா. பாரத தேசத்தில் ஆயிரக்கணக்கான மார்க்கங்கள், வழிபாட்டு முறைகள் இருந்தன. யார் வேண்டுமானாலும் எந்த மார்க்கத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்ற நிலை இருந்தது. அதைத்தான் சனாதன தர்மம் போதிக்கிறது. ஆனால், வெளியிலிருந்து வந்த வழிபாட்டு முறைகளை, எப்போது நம் மீது திணிக்கத் தொடங்கினார்களோ, அப்போதுதான் மோதல் தொடங்கியது இவ்வாறு கூறினார்.

The post உங்களில் என்னையும் என்னில் உங்களையும் காண்பது சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Santana Darma ,Governor R. N.N. Ravi ,Vadalore ,Tamil Nadu ,Governor ,R.R. N.N. Ravi ,Jayanthi ,Vallalar ,Vadalur ,
× RELATED குள்ளஞ்சாவடி அருகே நள்ளிரவில்...