×

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-கிளாஸ்

மெர்சிடிஸ் நிறுவனம் ஜி-கிளாஸ் வரிசையில் ஜி 400டி என்ற எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது. இது ஏற்கெனவே சந்தையில் இருந்த ஜி 350டிக்கு மாற்றாக வந்துள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.2.55 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட சுமார் ரூ.83 லட்சம் அதிகம். ரூ.1.5 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஆல் வீல் டிரைவ் கொண்ட இந்தக் காரில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 286 எச்பி பவரையும், 700 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இடம் பெற்றுள்ளது. 6.4 நொடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 210 கி.மீ வேகம் வரை செல்லலாம்.

The post மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-கிளாஸ் appeared first on Dinakaran.

Tags : Mercedes-Benz ,Mercedes ,Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...