×

குங்குமப்பூ முந்திரி பால்

தேவையானவை:

ஊற வைத்த முந்திரி – 20 nos.,
ஏலக்காய் – 2,
சர்க்கரை – 4 டீஸ்பூன்,
குங்குமப்பூ – 1 சிட்டிகை,
தண்ணீர் – 2 டம்ளர்.

செய்முறை:

ஊற வைத்த முந்திரி, குங்குமப்பூ, ஏலக்காய் சேர்த்து நைசாக அரைத்து, சர்க்கரை கலந்து மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, ஐஸ் துண்டுகள் சேர்த்து பரிமாறினால், புத்துணர்ச்சி அளிக்கும். படிக்கும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. தண்ணீருக்குப் பதிலாக காய்ச்சிய சூடான பாலிலும் கலந்து கொடுக்கலாம்.

The post குங்குமப்பூ முந்திரி பால் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...