×

வாரம்தோறும் மருத்துவ முகாம்

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில், வாரந்தோறும் செவ்வாய்கிழமையில் இலவச யுனானி மருத்துவ முகாம் நடந்து வருகிறது. முகாமில், சிறுநீரக கல், ஆஸ்துமா, முடக்கு வாதம், ஒற்றை தலைவலி, வெள்ளை போக்கு, மூளை பலவீனம், தூக்கமின்மை, பக்கவாதம் மற்றும் பொதுசிகிச்சை அளிக்கப்படுகிறது.

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் இலவச மருத்துவ முகாமில், 50க்கும் மேற்பட்டோர் பயன்பட்டு வருகின்றனர். அத்திப்பட்டு, வல்லூர், அத்திப்பட்டு புதுநகர், பட்டமந்திரி, மேலூர், நந்தியம்பாக்கம், மவுத்தம்பேடு, மீஞ்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post வாரம்தோறும் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Athipattu ,Meenjoor ,Dinakaran ,
× RELATED போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூரில் கஞ்சா...