×

நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்ற சாபக்கேடு தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது: திருமாவளவன் பேட்டி

சென்னை: நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்ற சாபக்கேடு தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் மாணவர்களை அழைத்து பரிசளித்து நடிகர் விஜய் பாராட்டினார். பணம் வாங்காமல் வாக்கு அளிக்க பெற்றோருக்கு அறிவுறுத்துமாறு மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். மாணவர்களை அழைத்து பாராட்டிய நிகழ்வை விஜய்யின் அரசியலுக்கான முன்னோட்டமாக அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்ற சாபக்கேடு தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. சினிமாவில் கிடைத்த புகழ் மூலம் மக்களை ஹைஜாக் செய்து விடலாம் என்ற எண்ணம் தமிழகத்தில்தான் உள்ளது. சினிமாவில் கிடைத்த புகழ் இருந்தால் போதும் முதல்வராகிவிடலாம் என சில நடிகர்கள் நினைக்கின்றனர். மக்களுக்கு பணியாற்றி சிறைக்கு சென்றோர் உள்ளிட்டோரை ஓரம் கட்டி மக்களை ஹைஜாக் செய்ய நடிகர்கள் முயற்சி செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். கேரளாவில் நடிகர் மம்முட்டி, கர்நாடகாவில் நடிகர் ராஜ்குமார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் போன்ற நடிகர்கள் சினிமா புகழை பயன்படுத்தவில்லை.

அரசியலுக்கு வராமல் அவர்கள் வேலையை பார்க்கின்றனர். மார்க்கெட் இழந்தவர்கள் அரசியலுக்கு வந்து மக்களை கவர்ந்து விடலாம் என நினைக்கிறார்கள். மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும். கருத்தியல் சார்ந்த களப்பணி ஆற்றி அரசியலுக்கு வரலாம்; நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும், வரவேற்கிறோம் எனவும் திருமாவளவன் கூறினார். நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பெரியார், அம்பேத்கரை படிக்க வேண்டும் என நடிகர் விஜய் கூறியதை வரவேற்கிறோம். பொது வாழ்வுக்கு எப்போது வேண்டுமானாலும்; யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார்.

The post நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்ற சாபக்கேடு தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : tamil nadu ,thirumavavavan ,chennai ,thirumavalavan ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...