×

தென்காசி சுற்றுவட்டாரத்தில் பச்சை மிளகாய் கிலோ ரூ.140 தொட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!!

தென்காசி: தென்காசி சுற்றுவட்டாரத்தில் பச்சை மிளகாய் கிலோ ரூ.140 தொட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் கத்திரிக்காய், வெண்டை, சீனி அவரை, பூசணிக்காய், சுரைக்காய், தக்காளி, மிளகாய் போன்றவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றை ஆலங்குளம், பாவுர்சத்திரம் மற்றும் சுரண்டை ஆகிய பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்று வருகின்றன. இந்நிலையில், பச்சை மிளகாய் விலை கடந்த சில தினங்களாக ஏறுமுகம் கண்டுள்ளது.

ஒரு கிலோ ரூ.80-லிருந்து ரூ.100-க்கு மேலாக கொள்முதல் செய்யப்படுகிறது. விளைச்சல் மற்றும் வரத்து குறைவே இதற்கு காரணம் என்பது வியாபாரிகளின் கருத்தாக உள்ளது. சந்தைகளுக்கு வரவேண்டிய பச்சை மிளகாய் மூட்டைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கடந்த மாதம் ரூ.20 குறைவாக கொள்முதல் செய்யப்பட்ட ஒரு கிலோ மிளகாய் கடந்த சில தினங்களாக ரூ.100-க்கு மேல் சென்றுள்ளது. இதே பச்சை மிளகாய் சிலரை விற்பனையில் ரூ.100 முதல் ரூ.140-க்கும் மேலாக விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

The post தென்காசி சுற்றுவட்டாரத்தில் பச்சை மிளகாய் கிலோ ரூ.140 தொட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : South Kasi ,Tengasi ,South Kasi District ,Venom ,Circumstance ,Dinakaran ,
× RELATED 8 மணி நேரம் ஒரே இடத்தில் நின்ற யானை உயிரிழப்பு