×

மகளிர் சுய உதவிக்குழு கடன் விவகாரம்; சாப்பாட்டில் எறும்பு மருந்தை கலந்து சாப்பிட்டு 4 பேர் தற்கொலை முயற்சி: திருச்செந்தூரில் பரபரப்பு

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பெஞ்சமின் காலனியை சேர்ந்த அமுதேஸ்வரி என்பவர் அப்பகுதி பெண்களுடன் இணைந்து மகளிர் சுய உதவிக் குழுவை தொடங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குழு, வங்கியில் பெற்ற ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கடனை திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகி மற்றும் 13 உறுப்பினர்களை வங்கி நிர்வாகம் தேடி சென்று விசாரணை நடத்தியது. அப்போது அமுதேஸ்வரி மற்றும் உறுப்பினர்கள், ‘ஏற்கனவே நாங்கள் குழு தலைவரிடம் பணத்தை கொடுத்து விட்டோம். அவர்தான் பணத்தை வங்கியில் செலுத்தவில்லை’ என்றனர்.
இதைத்தொடர்ந்து மகளிர் சுய உதவி குழு தலைவிக்கும், அமுதேஸ்வரி குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனம் உடைந்த அமுதேஸ்வரி (42), அவரது மகன் ஆறுமுகம் (20), அண்ணி மாரியம்மாள் (60), நாத்தனார் சிநேகா ஆகிய 4 பேரும் நேற்றிரவு உணவில் எறும்பு மருந்தை கலந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம், பக்கத்தினர் சென்று பார்த்தனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அமுதேஸ்வரி உள்ளிட்ட 4 பேரும் வாயில் நுரை தள்ளி மயங்கி கிடப்பது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post மகளிர் சுய உதவிக்குழு கடன் விவகாரம்; சாப்பாட்டில் எறும்பு மருந்தை கலந்து சாப்பிட்டு 4 பேர் தற்கொலை முயற்சி: திருச்செந்தூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruchendur ,Amudeswari ,Thuthukudi District ,Benjamin Colony ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...