×

அனுமன் கடவுளே கிடையாது என வசனகர்த்தா மனோஜ் முண்டாஷீர் பேச்சு… ஆதிபுருஷ் விவகாரத்தில் மீண்டும் வெடித்தது சர்ச்சை!!

டெல்லி : ஆதிபுருஷ் சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த அப்படத்தின் வசனகர்த்தா மனோஜ் முண்டாஷீர், அனுமன் கடவுளே இல்லை எனக்கூறி மேலும் சிக்கலில் மாட்டிக் கொண்டார். ராமாயணத்தை மையமாக வைத்து இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ஆதிபுருஷ். இதில் ராமனாக பிரபாஸ், ராவணனாக ஸையிப் அலிகான். சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 500 கோடி ரூபாய் செலவில் 3டி தொழிலுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவான ஆதிபுருஷ் படம் தமிழ், தெலுங்கு, இந்தி கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ.100 வசூலை தாண்டிய நிலையில், எதிர்மறை விமர்சனங்களால் வசூலில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராமர் மற்றும் சீதை கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்ட விதம், அனுமனின் பேச்சு வழக்கு மொழி, சர்ச்சைக்குரிய வசனங்கள் என பல்வேறு அம்சங்களிலும் இந்து அமைப்பினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆதி புருஷ் வசனகர்த்தா மனோஜ் முண்டாஷீர் எழுதிய வசனங்களுக்கு இந்தியாவில் மட்டுமின்றி நேபாளத்திலும் எதிர்ப்பு எழுந்தது. சீதை இந்தியாவின் மகள் என்ற வசனத்திற்கு நேபாள அரசு கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த வசனகர்த்தா மனோஜ் முண்டாஷீர், அனுமன் கடவுளே இல்லை என்றும் அவர் ஒரு பக்தர் என்றும் கூறியுள்ளார். பக்தரை நாம் தான் கடவுளாக மாற்றி விட்டோம் எனவும் கூறி இருப்பது அவருக்கு மேலும் சிக்கலை உருவாக்கி உள்ளது. ஏற்கனவே மும்பையில் போலீஸ் பாதுகாப்பில் உள்ள வசனகர்த்தா மனோஜ் முண்டாஷீருக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

The post அனுமன் கடவுளே கிடையாது என வசனகர்த்தா மனோஜ் முண்டாஷீர் பேச்சு… ஆதிபுருஷ் விவகாரத்தில் மீண்டும் வெடித்தது சர்ச்சை!! appeared first on Dinakaran.

Tags : Vaganakarta ,Manoj Mundashir ,Adipurush ,God ,Delhi ,Anuman ,Manoj Muntashir ,
× RELATED பிரபாஸ் ஜோடியாகிறார் நிதி அகர்வால்