×

சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 5 மணி நேரமாக நீடித்த பைபாஸ் அறுவை சிகிச்சை நிறைவு..!!

சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 5 மணி நேரமாக நீடித்த பைபாஸ் அறுவை சிகிச்சை நிறைவுபெற்றது. இதயத்திற்கு செல்லும் 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்ததால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சிகிச்சை செய்ய மருத்துவக்குழு பரிந்துரைத்திருந்தது. அதன்படி, காவேரி மருத்துவமனையில் அதிகாலை 5.15 மணியளவில் இதய அறுவை சிகிச்சை தொடங்கிய நிலையில் தற்போது சிகிச்சை நிறைவடைந்தது. இதய அறுவை சிகிச்சை நிபுணர் ரகுராமன் தலைமையிலான மருத்துவர்கள் குழு செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வார்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார்.

செந்தில்பாலாஜி வெண்டிலேட்டர் உதவியுடன் தற்போது மயக்க நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நாட்கள் அமைச்சர் தீவிர சிகிச்சை கண்காணிப்பில் இருப்பார் எனவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். செந்தில்பாலாஜிக்கு அளித்த சிகிச்சை, உடல்நிலை குறித்து விரைவில் மருத்துவ அறிக்கை வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டபின் 90 நாட்கள் ஓய்வு தேவை என இதயநோய் சிகிச்சை நிபுணர் அருண் தெரிவித்துள்ளார். முழுமையான இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப 3 மாதங்கள் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 5 மணி நேரமாக நீடித்த பைபாஸ் அறுவை சிகிச்சை நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Chennai Kaveri Hospital ,Senthilephalaji ,Chennai ,Senthilbhalaji ,Cauvery Hospital ,Chenthilephalaji ,
× RELATED எக்மோ சிபிஆர் புதிய திட்டம்...