×

15 டிராக்டர்களில் 500 வகையான சீர்வரிசை!

திருமணம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்வாகும். இதனால்தான் கடன் வாங்கியாவது கல்யாணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற மனப்பான்மை மக்களிடம் நிலவுகிறது. இதில் வசதி படைத்தவர்களின் இல்ல திருமணங்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை. பல வகையான ஆடம்பரங்கள் அதில் இருக்கும். மணமகன், மணமக்கள் ஹெலிகாப்டரில் வந்திறங்குவது, சாரட் வண்டி ஊர்வலம் என்று அதகளப்படுத்துவர். போதாக்குறைக்கு சீர் வரிசை அளிப்பதில் தங்கள் பெருமையை பறைசாற்றும் வகையில் மாட்டு வண்டிகளில் சீர்வரிசை ஊர்வலம், ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட கால்நடைகளை மணமேடையில் பரிசளிப்பது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. பொதுவாக பெண் வீட்டார், சீர் வரிசை அளிப்பதுதான் அதிகமாக இருக்கும். ஆனால் பெண்ணை நிச்சயம் செய்யப்போன மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்கு தருவதற்காக கொண்டு சென்ற ஒரு சீர் வரிசை ஊர்வலம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருமுளை கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற திருந்தையன் என்பவருக்கும், அவரது உறவுக்கார பெண்ணான மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் சிவகுருநாதன்-லதா தம்பதியின் மகள் தினோஷாவிற்கும் திருமண நிச்சயதார்த்த விழா ஒரத்தநாட்டில் 2 நாட்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது அருமுளை கிராமத்திலிருந்து 15 டிராக்டர்களில் 500 தட்டுக்களில் பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்கள் நிச்சயதார்த்த மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. வாண வேடிக்கை, பட்டாசுகள் முழங்க நீ….ண்ட வரிசையில் வந்த இந்த சீர்வரிசை ஊர்வலத்தை அப்பகுதியினர் வாய் பிளக்க ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

The post 15 டிராக்டர்களில் 500 வகையான சீர்வரிசை! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...