×

சமூகவலைதளத்தில் போலி செய்திகளை கண்டுபிடிக்க சித்தராமையா உத்தரவு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்துறை அமைச்சர் பரமேஸ்வருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், ‘ நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் போலி செய்திகளை சமூகவலைதளத்தில் பரவவிட்டு கலவரத்தை தூண்ட எதிர்க்கட்சிகள் திட்டமிடுகிறார்கள். எனவே, போலி செய்திகளை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து வேரறுக்க வேண்டும். எனவே இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளின் உண்மை தன்மையை ஆராய வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வை அவர்கள் ஏற்படுத்த வேண்டும் இவ்வாறு கூறினார்.

The post சமூகவலைதளத்தில் போலி செய்திகளை கண்டுபிடிக்க சித்தராமையா உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Siddaramaiah ,Bengaluru ,Karnataka ,Chief Minister ,Home Minister ,Parameswar ,Parliament ,Dinakaran ,
× RELATED `சக்தி திட்டத்தால் தான் நான் சட்டம்...