×

இந்துஸ்தான் மெட்ரிக் பள்ளியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி

 

கோவை, ஜூன் 21: இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடந்தது. இன்றைய அவசர உலகத்தில் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க யோகா பயிற்சி என்பது அவசியமான ஒன்றாகவே இருக்கிறது. பள்ளி மாணவர்களிடையே யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச யோகா தினத்தையொட்டி பல யோகா நிகழ்வுகள், ஆசனங்களை இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் நிகழ்த்தினர். பிரதமரும், தமிழ்நாடு அரசும் அறிவுறுத்தியதின் பேரில் இந்த நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் தாளாளர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா சதீஷ் பிரபு, முதல்வர் செண்பகவல்லி, யோகா ஆசிரியர் ராபர்ட் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post இந்துஸ்தான் மெட்ரிக் பள்ளியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Day ,Hindustan Matriculation School ,Coimbatore ,International Yoga Day ,Hindustan Matriculation High School ,Dinakaran ,
× RELATED சீரான குடிநீர் வழங்காததை கண்டித்து...