×

திறந்தவெளியை பயன்படுத்துவதை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை

வருசநாடு, ஜூன் 21: கடமலைக்குண்டு ஊராட்சி, மேலப்பட்டி கிராமத்தில் சாலை ஓரங்களில் திறந்தவெளியில் பொதுமக்கள் மலம் கழிப்பதை தடுக்கும் வகையில் டார்ச்லைட் அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், ஊராட்சி மன்றத்தலைவர் சந்திரா தங்கம், துணைத்தலைவர் பிரியா தனபாலன் மற்றும் ஊராட்சி செயலாளர் சின்னச்சாமி, அனைத்து வார்டு உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், தூய்மை காவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், கடமலைக்குண்டு ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களையும் தூய்மையாக பாதுகாப்பதே எங்களின் நோக்கமாகும். இங்குள்ள மக்களின் பாதுகாப்பு கருதி ஊராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, என்றார்.

The post திறந்தவெளியை பயன்படுத்துவதை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Melapatti ,Kadamalaikundu ,Dinakaran ,
× RELATED கடமலை மயிலை ஒன்றியத்தில் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்