×

ராஜபாளையம் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

ராஜபாளையம், ஜூன் 21: ராஜபாளையம் பிஏசி ராமசாமி ராஜா தொழில்நுட்ப கல்லூரியில் 2023-2024ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு பட்டய படிப்பில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு துவக்க விழா நடைபெற்றது. முதலாம் ஆண்டு துறைத்தலைவர் அனந்தகிருஷ்ணன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் சீனிவாசன் தலைமை வகித்தார். ராம்கோ கல்வி குழுமங்களின் முதன்மை கல்வி அதிகாரி டாக்டர் வெங்கட்ராஜ், முன்னாள் மாணவர் சங்க தலைவர் சந்திரசேகர் ராஜா ஆகியோர் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்று பேசினர். சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவரும், தாசில்தாருமான(சிப்காட்) மாரிமுத்து கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாடர்ன் ஆபீஸ் ப்ராக்டிஸ் துறை தலைவர் டாக்டர் செல்வலட்சுமி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

The post ராஜபாளையம் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா appeared first on Dinakaran.

Tags : Rajapalayam College of Technology ,Rajapalayam ,Rajapalayam PAC Ramasamy Raja College of Technology ,
× RELATED ராஜபாளையம் அருகே ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதி விபத்து