×

இளங்கன்றுகளுக்கான கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கடுகூர் ஊராட்சி கோப்பிலியன் குடிகாடு கிராமத்தில் இளங்கன்றுகளுக்கான கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற் றது. தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி முகாம் நடைபெற்றது. அரியலூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் சுரேஷ் கிறிஸ்டோபர் அறிவுரைப்படி நடைபெற்ற இந்த முகாமை கடுகூர் ஊராட்சி மன்ற தலைவர் தர்மலிங்கம் துவக்கி வைத்தார். அரியலூர் கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். நான்கு மாதங்கள் முதல் 8 மாதங்கள் வயதுடைய இளம் கன்றுகளுக்கு அடையாள காது வில்லைகள் பொருத்தப்பட்டு, கருச்சிதைவு நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடுகூர் கால்நடை உதவி மருத்துவர் குமார் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராமலிங்கம் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி செலுத்தினர். இம்முகாமில் 20 விவசாயிகள் தங்களுடைய பசுங்கன்றுகளை கொண்டு வந்து தடுப்பூசி போட்டு பயனடைந்தனர். முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் கருச்சிதைவு நோய் பற்றிய விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டது.

The post இளங்கன்றுகளுக்கான கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Kopilian Gudigadu ,Kadukur Panchayat, Ariyalur district ,Dinakaran ,
× RELATED இணையவழியில் நத்தம் பட்டா மாறுதல்...