×

ரூ.5 லட்சம் குத்தகைத் தொகை செலுத்தாததால் டாஸ்மாக் பாருக்கு சீல்வைப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் தலக்காஞ்சேரியில் ரூ.5 லட்சம் குத்தகைத் தொகையை செலுத்தாததால் டாஸ்மாக் பாருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். திருவள்ளூர் தலக்காஞ்சேரியில் 2 டாஸ்மாக் கடைகள் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றன. அதே கட்டிடத்தின் பின்புறம் டாஸ்மாக் பாரும் செயல்பட்டு வருகிறது. திருநின்றவூரைச் சேர்ந்த மோகன் என்பவர் இந்த பாரை ஏலம் எடுத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் தஞ்சாவூரில், டாஸ்மாக் ‘பாரில்’ மது அருந்தி இருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் அதிரடி சோதனை நடத்தி அனுமதியின்றி செயல்பட்டுவந்த 71 பார்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதில் தலக்காஞ்சேரியில் உள்ள டாஸ்மாக்பாரும் அடங்கும். இந்நிலையில் தற்போது ஒரு மாதத்திற்கான குத்தகைத்தொகையை மட்டும் செலுத்தி குறிப்பிட்ட அந்த பார் செயல்படத் தொடங்கியிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தெரிய வந்தது. ஆனால் கடந்த 4 மாதங்களாக குத்தகைத்தொகையை செலுத்தாமல் இருந்ததால் உடனடியாக செலுத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி 4 மாத குத்தகைத்தொகை கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் வரை அரசுக்கு செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் குத்தகைத்தொகையை செலுத்தாததையடுத்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஜெயக்குமார், கலால் இன்ஸ்பெக்டர் தேவிகா மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பாருக்கு நேற்று சீல் வைத்தனர். மேலும் அந்த 2 டாஸ்மாக் கடைகளிலும் விலைப்பட்டியல்வைக்காமல் இருந்ததால், உடனடியாக விலைப்பட்டியலை அங்கு அதிகாரிகள் வைத்துவிட்டுச்சென்றனர்.

The post ரூ.5 லட்சம் குத்தகைத் தொகை செலுத்தாததால் டாஸ்மாக் பாருக்கு சீல்வைப்பு appeared first on Dinakaran.

Tags : Tasmac bar ,Tiruvallur ,Tiruvallur Thalakancheri ,Thiruvallur Thalakancheri… ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...