×

சமூக நீதியை காத்தவர் கலைஞர்: தேஜஸ்வி யாதவ் புகழாரம்

திருவாரூர்: ‘சமூக நீதியின் அடையாளம் கலைஞர்’ என பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் புகழாரம் சூட்டினார். திருவாரூர் காட்டூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்று பேசுகையில், ‘சமூக நீதிக்காக போராடிய கலைஞர் கோட்டம் விழாவில் பங்கேற்பதில் பெருமை அடைகிறேன். சமூக நீதியை காத்ததிலும், சமூக ஏற்றத்தாழ்வுகளை களைந்து எடுத்ததிலும் கலைஞர் பெரும் பங்கு வகித்துள்ளார். திராவிட கருத்தியலை நிலை நிறுத்தியதில் முக்கிய தலைவராக கலைஞர் திகழ்ந்துள்ளார்.

முக்கியமாக, சமூக நீதியை காத்ததில் பெரும் பங்கு வகித்தவர் கலைஞர். கலைஞரின் சமூக நீதி கொள்கைகளை நாடு முழுவதும் முன்னெடுக்க வேண்டும். கலைஞர், சமூக நீதிக்காக நிறைய திட்டங்களை அறிவித்துள்ளார். அப்படிப்பட்டவருக்கு இந்த கோட்டம் திருவாரூரில் கட்டப்பட்டு அதன் திறப்பு விழாவுக்கு என்னை அழைத்தமைக்கு பெருமை அடைகிறேன். சமூகத்தில் பின் தங்கிய, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல அயராது உழைத்தவர் கலைஞர். சமூக சமுத்துவத்தை நிலைநாட்டியவர் கலைஞர். பொருளாதாரத்தில், சமுதாயத்தில் பின்தங்கிய மக்களை யாரும் கண்டு கொள்ளாத அவர்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல பாடுபட்டவர் கலைஞர்.

தமிழ்மொழி, தமிழ் கலாச்சாரம் முன்னேற வேண்டும் என கலைஞர் பாடுபட்டார். திராவிட மாடலை நிலை நிறுத்த பல ஆண்டுகாலம், பல லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்து போராடியவர் கலைஞர். சுயமரியாதை திருமணம், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, இளைய சமுதாயம் முன்னேற்றம் அடைய பாடுபட்டவர் கலைஞர். இவர் எல்லாவற்றிற்கும் முன்னோடியாக இருந்தார். இதனால் தான் கலைஞர் வரலாற்றில் முக்கியத்துவத்தை பிடித்துள்ளார். தேசிய அளவில் சமதர்ம சமுதாயம் அமைய கலைஞர் போராடியுள்ளார். சமூக சீர்திருத்தவாதிகளான லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார் ஆகியோருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் கலைஞர். அவருக்கு நான் உளமார நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவரது வழி வந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post சமூக நீதியை காத்தவர் கலைஞர்: தேஜஸ்வி யாதவ் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Tejashwi Yadav ,Tiruvarur ,Bihar ,Deputy ,Chief Minister ,Tiruvarur Kattoor… ,Tejaswi Yadav ,
× RELATED வேலையில்லா திண்டாட்டம், கல்வி,...