×

ஜெர்மன் பிரதமருடன் சீன பிரதமர் லீ கியாங் சந்திப்பு

பெய்ஜிங்: சீன பிரதமர் லீ கியாங் ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் ஜெர்மன் அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெயின்மியரை லீ கியாங் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து நேற்று ஜெர்மன் பிரதமர் ஒலாப் ஷால்சை சீன பிரதமர் கியாங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவுகளின் மேம்பாடு, பருவநிலை மாற்றம், உக்ரைன் போர் உள்ளிட்ட உலகளாவிய பிரச்னைகள் தொடர்பாக இருவரும் விரிவான ஆலோசனைகளை நடத்தினர்.

The post ஜெர்மன் பிரதமருடன் சீன பிரதமர் லீ கியாங் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Premier Li Keqiang ,Beijing ,Premier Li Qiang ,Germany ,President ,Frank-Walter Steinmeier ,Lee ,
× RELATED நிலவுக்கு விண்கலத்தை ஏவியது சீனா