×

துலீப் டிராபி கிரிக்கெட் அட்டவணை வெளியீடு

புதுடெல்லி: மண்டலங்களுக்கு இடையேயான துலீப் டிராபி கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியம் மற்றும் ஆலூர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள போட்டிகளில் மேற்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு, மத்திய, வட கிழக்கு மண்டல அணிகள் களமிறங்குகின்றன. மத்திய மண்டலம் – கிழக்கு மண்டலம் மோதும் தொடக்க போட்டி ஜூன் 28ம் தேதி ஆலூர் ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. எம்.சின்னசாமி அரங்கில் தொடங்கும் மற்றொரு போட்டியில் வடக்கு – வட கிழக்கு மண்டல அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் மேற்கு மண்டலம், 2வது இடம் பிடித்த தெற்கு மண்டலம் அணிகள் நேரடியாக அரையிறுதியில் களமிறங்குகின்றன. இறுதிப் போட்டி எம்.சின்னசாமி அரங்கில் ஜூலை 12ம் தேதி தொடங்கி நடைபெறும்.

The post துலீப் டிராபி கிரிக்கெட் அட்டவணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Duleep ,New Delhi ,Duleep Trophy Cup Test ,Bengaluru M. Chinnaswamy Stadium… ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...