×

நெதர்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே: ஆல் ரவுண்டராக அசத்திய சிக்கந்தர் 4 விக்கெட், 102* ரன்

ஹராரே: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான தகுதிச் சுற்று ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், ஜிம்பாப்வே 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்துவீச… நெதர்லாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன் குவித்தது. தொடக்க வீரர் விக்ரம்ஜித் சிங் 88 ரன், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 83 ரன், மேக்ஸ் ஓ தாவுத் 59 ரன், சகிப் ஸுல்பிகர் 34* ரன் விளாசினர். ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் 4, ரிச்சர்ட் 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து கடினமான இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே 40.5 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 319 ரன் எடுத்து அபாரமாக வென்றது. ஜாய்லார்டு 40, கேப்டன் கிரெய்க் எர்வின் 50, ஷான் வில்லியம்ஸ் 91 ரன் (58 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். சிக்கந்தர் 102 ரன் (54 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்), ரயன் பர்ல் 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4 விக்கெட் கைப்பற்றியதுடன் சதமும் விளாசிய சிக்கந்தர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஜிம்பாப்வே 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. அந்த அணி ஏ பிரிவில் தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் (4 புள்ளி) முதலிடத்தில் உள்ளது. நேபாளம் வெற்றி: ஏ பிரிவில் நேற்று நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் அமெரிக்கா – நேபாளம் அணிகள் மோதின. இந்த போட்டியில் நேபாளம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. அமெரிக்கா 49 ஓவரில் 207 ரன்னுக்கு ஆல் அவுட் (மொதானி 42, கஜானந்த் 26, ஷயன் ஜகாங்கிர் 100*). நேபாளம் 43 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 211 (குஷால் 39, ஷர்கி 77*, திபேந்திரா சிங் 39*).

The post நெதர்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே: ஆல் ரவுண்டராக அசத்திய சிக்கந்தர் 4 விக்கெட், 102* ரன் appeared first on Dinakaran.

Tags : Netherlands ,Zimbabwe ,Awathya Sikander ,Harare ,A Division League ,ICC World Cup ODI tournament ,Nederland ,Awesome ,Sikander ,Dinakaran ,
× RELATED ஜிம்பாப்வேயின் புதிய நாணயம் பெயர் ஜிக்