×

சமூக நீதியின் அடையாளம் கலைஞர்; சமூக நீதியை காத்ததில் மிகப்பெரும் பங்காற்றியவர் கலைஞர்: பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி புகழாரம்..!!

திருவாரூர்: சமூக நீதியின் அடையாளம் கலைஞர்; சமூக நீதியை காத்ததில் மிகப்பெரும் பங்காற்றியவர் கலைஞர் என்று பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி புகழாரம் சூட்டியுள்ளார். காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைஞர் கோட்டத்தில் அவரது முழு உருவச் சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். காட்டூர் கிராமத்தில் சுமார் 7,000 சதுர அடியில் ரூ.12 கோடி மதிப்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. திருவாரூர் தேர் போன்ற வடிவமைப்பில் மிக பிரம்மாண்டமாக கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கலைஞர் கோட்டத்தில் உள்ள முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ள கலைஞரின் வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களையும் பார்வையிட்டார். பின்னர் விழாவில் தேஜஸ்வி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சமூகம், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வசதிகளை செய்து கொடுத்தவர் கலைஞர். பெண்களுக்கான அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுத்தது திமுக தான். சாதி கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களில் முன்வரிசையில் இருந்தவர் கலைஞர்.

கலைஞரின் அரசியல் வாழ்க்கை இளைஞர்களுக்கு ஊக்கம் தரக்கூடியது. சாதி ரீதியான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் அனைவரும் சமமாக வாழவேண்டும் என கலைஞர் வலியுறுத்தினார். சமூக நீதிக்கான வருங்கால நமது போராட்டங்களுக்கு கலைஞரின் கொள்கைகள் வழிகாட்டும். கலைஞர் கடைபிடித்த சமூக நீதி, சமத்துவம் போன்ற கொள்கைகளை தேசிய அளவில் செயல்படுத்துவது அவசியம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய தேஜஸ்வி, திராவிட கருத்தியலை நிலை நிறுத்தியதில் முக்கிய தலைவராக கலைஞர் திகழ்ந்துள்ளார்.

கலைஞரின் கொள்கைகளும் சிந்தனைகளும் இன்றும் அவசியமாக இருப்பதை நினைவு கூறவே கூடியிருக்கிறோம். கலைஞரின் சிந்தனைகள் அடுத்தடுத்த தலைமுறைகளிடம் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. கலைஞரின் சமூக நீதி கொள்கைகளை நாடு முழுவதும் முன்னெடுக்க வேண்டும். சமூக நீதியின் அடையாளம் கலைஞர்; சமூக நீதியை காத்ததில் மிகப்பெரும் பங்காற்றியவர் கலைஞர். மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் பொலிவுறும் என்றும் தேஜஸ்வி குறிப்பிட்டார்.

The post சமூக நீதியின் அடையாளம் கலைஞர்; சமூக நீதியை காத்ததில் மிகப்பெரும் பங்காற்றியவர் கலைஞர்: பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி புகழாரம்..!! appeared first on Dinakaran.

Tags : Bihar ,Deputy Chief Minister ,Tejaswi Pukhazharam ,Tiruvarur ,Tejashwi Pukhazharam ,
× RELATED மேகாலயா துணை முதல்வர் வீட்டின் மீது குண்டு வீச்சு