×

நெடுந்தீவு அருகே பழுது காரணமாக கரை ஒதுங்கிய விசைப்படகில் இருந்த 9 மீனவர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு..!!

கொழும்பு: நெடுந்தீவு அருகே பழுது காரணமாக கரை ஒதுங்கிய விசைப்படகில் இருந்த 9 மீனவர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், நேற்று ஏராளமான படகுகளில் புறப்பட்டு சென்றனர். அதில் 9 மீனவர்கள் சென்ற படகு, நெடுந்தீவு அருகே கரை ஒதுங்கி பாறைகள் நிறைந்த பகுதியில் சிக்கி கொண்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விசைப்படகில் பழுது ஏற்பட்டதாக தெரிகிறது. நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களின் படகு கரை ஒதுங்கியதை அறிந்த இலங்கை கடற்படை அதிகாரிகள், படகினை கைப்பற்றி அதில் இருந்த 9 தமிழக மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

எஞ்சின் கோளாறு காரணமாக படகு கரையொதுங்கியதா? அல்லது எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்தார்களா? என்ற கோணத்தில் தமிழக மீனவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் ராமேஸ்வரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் 9 பேரும் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பழுது காரணமாக கரை ஒதுங்கிய விசைப்படகில் இருந்த 9 பேரும் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். 9 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்ததாக கூறப்பட்ட நிலையில் மனிதாபிமான அடிப்படையில் விடுவித்துள்ளனர். பழுதடைந்த விசைப்படகை கயிறு கட்டி இழுத்துக் கொண்டு வந்து சர்வதேச எல்லையில் இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தனர்.

The post நெடுந்தீவு அருகே பழுது காரணமாக கரை ஒதுங்கிய விசைப்படகில் இருந்த 9 மீனவர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nedundivu ,Indian Navy ,Colombo ,Nanthevu ,Dinakaran ,
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...