×

கூட்டணி ஆட்சி கவிழ்ந்த இன்றைய தினத்தை உலக துரோகிகள் தினமாக அறிவிக்க வேணும்: ஐ.நா-க்கு கடிதம் எழுதிய சிவசேனா எம்பி

மும்பை: மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்த இன்றைய தினத்தை உலக துரோகிகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா சபைக்கு சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கடிதம் எழுதியுள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதல்வராக உத்தவ் தாக்கரே இருந்து வந்தார். சிவசேனா கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்ெகாடி தூக்கியதால் கூட்டணி ஆட்சி கடந்தாண்டு ஜூன் 20ம் தேதி கவிழ்ந்தது. முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்நாவிசும் பதவியேற்றனர்.

அவர்களின் ஆட்சி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், உத்தவ் தாக்கரேவின் ஆட்சி கவிழ்ந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதுகுறித்து உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த எம்பி சஞ்சய் ராவத், ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ஜூன் 20ம் தேதியை உலக துரோகிகள் தினமாக அறிவிக்க வேண்டும். இன்றைய தினத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கவிழ்ந்தது. துரோகிகளாக மாறிய எங்களது கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 50 கோடி கொடுக்கப்பட்டது. சர்வதேச யோகா தினத்தைப் (ஜூன் 21) போன்று, ஜூன் 20ம் தேதியை உலகத் துரோகிகள் தினமாக கடைபிடிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post கூட்டணி ஆட்சி கவிழ்ந்த இன்றைய தினத்தை உலக துரோகிகள் தினமாக அறிவிக்க வேணும்: ஐ.நா-க்கு கடிதம் எழுதிய சிவசேனா எம்பி appeared first on Dinakaran.

Tags : World Traitors Day ,Shiv Sena ,UN ,Mumbai ,Maharashtra ,
× RELATED உத்தவின் சிவசேனா போலி: அமித் ஷா கண்டுபிடிப்பு