×

பாஜ சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் ஓ…ஓ…ஓ… என்று எல்லை மீறி நடிகர் ராதாரவி ஆபாச பேச்சு: சமூக வலை தளத்தில் பரவும் வைரல் வீடியோ

பெரம்பூர்: தமிழகத்தில் ஒன்றிய பாஜக அரசின் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு சாதனை விளக்கம் என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி கடந்த 17ம்தேதி சென்னை மூலக்கடை சந்திப்பில் வடசென்னை மேற்கு மாவட்ட பாஜ சார்பில், சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, நடிகர் ராதாரவி உள்ளிட்டவர்கள் பேசினர். சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் நடிகர் ராதாரவி பேச ஆரம்பிக்கும்போதே மக்கள் முகம் சுளிக்க வைக்கும் வகையில் ஓ(கெட்ட வார்த்தை) என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தினார். மேலும் அவர் பேசும்போது கீழே இருந்த தொண்டர்கள் கமெண்ட் செய்தனர். அதற்கு அவர்களை பார்த்து ஓ ஓ ஓ என்று கெட்ட வார்த்தைகளால் பேசி போய் உட்காருங்கள் என்றார்.

அதற்கு கீழே இருந்த கட்சிக்காரர் ஒருவர் உங்களது பேச்சை நாங்கள் ரசிக்கின்றோம் என்றார். அதற்கு ராதாரவி, ‘’நீங்கள் —- புடுங்க வேண்டாம்’’ என்று தெரிவித்து மீண்டும் பேசினார். அப்போது பாஜ தொண்டர் ஒருவர் கீழே செல்போனில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் பேச்சை நிறுத்திய ராதாரவி, மீண்டும் ஓ போட்டு நீ செல்போனில் பேசுவது எனக்கு இங்கு கேட்கிறது, நான் பேசுவதை நீ கேட்கிறாயா அல்லது நீ பேசுவதை நான் கேட்க வேண்டுமா என கோபமாக கேட்டார். இதைத்தொடர்ந்து ராதாரவி பேசும்போது, ‘’எது புட்டுனு போகும் எது நிலைத்து நிற்கும் என தெரியாது. கிருஷ்ணசாமி கட்சி, ஜி.கே வாசன் கட்சி போன்ற கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியே சென்றாலும் அல்லது மற்ற எந்த கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியே சென்றாலும் பாஜக கூட்டணி இல்லாமல் தனித்து நிற்கும்.

தொடர்ந்து அவர் பேசும்போது, ‘’எனக்கு முன் பேசிய திருப்பதி நாராயணன் பேசியது எனது மண்டைக்கு எட்டவில்லை. காலங்கள் மாறி வருகிறது. அதற்கு ஏற்றார்போல் நாம் நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும். நான் பிஜேபி தலைவர்களை பற்றி தவறாக பேசவில்லை. பாஜக கட்சி இன்னும் வளராததற்கு காரணம் சுறுசுறுப்பு குறைவாக உள்ளது. நான் ஒரு டீ கேட்டு இருபது நிமிடம் ஆகிறது இதுவரை வரவில்லை. இப்போது தான் பால் கறக்க சென்றுள்ளார்கள் என்று நினைக்கிறேன். வந்துவிடும்.பாஜக மீட்டிங்கில் பக்தியுடன் பேசுவார்கள் என்றுதான் அனைவரும் நினைத்து வந்திருப்பீர்கள்.ஆனால் அப்படி பேசினால் வேலைக்கு ஆகாது. பேச்சுக்கு பேச்சு இரண்டு ஓ போட்டா தான் நீங்கள் பேச்சை ரசித்து கேட்பீர்கள். இந்த மக்களை திருத்தவே முடியாது. மவுன புரட்சி செய்கிறார்கள் என கூறினார்கள். அப்படி ஒரு —– கிடையாது. இந்த மக்களை திருத்தவே முடியாது.

பணம் வாங்கிக் கொண்டுதான் ஓட்டு போடுவார்கள். இந்த தேர்தலில் பிஜேபி ஜெயிக்கவில்லை என்றால் நாம் அனைவரும் நாசமா போய்விடுவோம். கிறிஸ்தவ மக்கள் நமக்கு ஓட்டு போடவில்லை, இஸ்லாமிய மக்கள் நமக்கு ஓட்டு போடவில்லை என நாம் கவலை கொள்ளவேண்டாம். ஆறு அறிவு உள்ள மக்கள் அனைவரும் நமக்குத் தான் ஓட்டு போடுவார்கள்.பணம் கொடுத்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். எனவே இந்த முறை பிஜேபியிடம் பணம் கொடுக்கச் சொல்லுங்கள், நாம் நினைத்தால் வெற்றிபெறலாம் என்பது முடியாது. மேலே உள்ளவனும் நினைக்க வேண்டும். அதனால் மேலே சொல்லி பணம் வாங்குங்கள் என்று துணைத் தலைவர் நாராயண திருப்பதியிடம் தெரிவித்தார்.இவ்வாறு ராதாரவி பேசிய ஆபாச பேச்சுக்கள் வலைதள பக்கத்தில் வைரலாகி வருவதுடன், “இதுதான் பாஜகவின் தூய்மையான அரசியலா என்று நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

The post பாஜ சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் ஓ…ஓ…ஓ… என்று எல்லை மீறி நடிகர் ராதாரவி ஆபாச பேச்சு: சமூக வலை தளத்தில் பரவும் வைரல் வீடியோ appeared first on Dinakaran.

Tags : Baja ,Radaravi ,Perampur ,Tamil Nadu ,Union Bajka Government ,
× RELATED ராஜஸ்தானில் பரபரப்பு; சுயேச்சை, உதிரி...