×

ஜவ்வாதுமலை எலந்தம்பட்டு கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்

*குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு

திருவண்ணாமலை : ஜவ்வாதுமலை எலந்தம்பட்டு கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் மலைவாழ்மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நேற்று நடந்தது. அதில், கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப்சிங், ஆர்டிஓ மந்தாகினி, வேளாண் இணை இயக்குநர் ஹரகுமார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதியோர் உதவித்தொைக, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், சுய தொழில் கடனுதவி, தாட்ேகா கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 419 பேர் மனுக்களை அளித்தனர். அதன் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஜவ்வாதுமலை பகுதியை சேர்ந்த எலந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சாலை வசதி கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:ஜவ்வாதுமலை ஒன்றியம், கானமலை ஊராட்சிக்கு உட்பட்ட எலந்தம்பட்டு கிராமத்தில் உள்ள 185 குடும்பங்களில் 750க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஆனால், எலந்தம்பட்டு கிராமத்துக்கு இன்னும் சாலை வசதி அமையவில்லை. அதனால், சுமார் 10 கி.மீட்டர் தூரம் மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

கடந்த 15ம் தேதி எலந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த பூச்சி மனைவி சாந்தி என்பவருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்றப்பட்டது. சாலை வசதியில்லாத காரணத்தால் 10 கி.மீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கிச்சென்று வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். தாமதமாக கொண்டு சென்றதால் அவரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதுபோல், தொடர்ந்து பலமுறை அவதிப்படுகிறோம். எனவே, எலந்தம்பட்டு கிராமத்துக்கு சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

கலசபாக்கம் அடுத்த பத்தியவாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அந்த கிராமத்தில் உள்ள குளத்து புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மனு அளித்தனர். அதேேபால், மங்கலம் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர், தம்முடைய சொத்துக்களை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார். அப்போது ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்டவைகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முயன்றார். பின்னர், கோரிக்கை மனுவை அளித்தார். கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post ஜவ்வாதுமலை எலந்தம்பட்டு கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Jawvadumalai Elanthampattu village ,Thiruvannamalai ,Javvadumalai Elanthampattu village ,Dinakaran ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...