×

உடல் நலக் குறைவு காரணமாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் தமிழ்நாடு வருகை ரத்து!

பீகார் : கலைஞர் கோட்டத்தை திறக்க வரவிருந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் வருகை ரத்து செய்யப்பட்டது. உடல்நிலை காரணமாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் தமிழகம் வருகை ரத்து செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிஷ்குமார் வருகை ரத்தான நிலையில் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் வருகை உறுதியானது.

திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி செலவில் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதில் கலைஞரின் உருவச்சிலை, அவரது தந்தையான முத்துவேல் நினைவு நூலகம், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வகையில் அருங்காட்சியகம் மற்றும் கூட்ட அரங்கு உள்ளிட்ட கட்ட மைப்புகள் இடம் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்க இருந்தார்.

இந்நிலையில் உடல் நலக் குறைவு காரணமாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் திருவாரூர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி மட்டும் கூட்டத்தில் பங்கேற்பார் என தகவல் என தகவல் வெளியாகியுள்ளது.

The post உடல் நலக் குறைவு காரணமாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் தமிழ்நாடு வருகை ரத்து! appeared first on Dinakaran.

Tags : Bihar ,Chief Minister ,Nitish Kumar ,Tamil Nadu ,Kalainar Kottam ,
× RELATED மக்களவை தேர்தல் முடிவுக்கு பின்...