×

கம்பம்மெட்டு மலைச்சாலையில் பாறை சரிவு

கம்பம்: தொடர் மழை காரணமாக கம்பம்மெட்டு மலைச்சாலையில் பாறைகள் சரிந்ததால் நேற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கம்பத்தில் இருந்து கேரளாவை இணைக்கும் கம்பம்மெட்டு மலைச்சாலை உள்ளது. இந்தச் சாலையில் நாள்தோறும் விவசாய மற்றும் வணிக ரீதியாக சுமார் 500க்கும் மேலான வாகனங்கள் சென்று வருகின்றன.கடந்த மூன்று நாட்களாக இப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று திடீரென்று பாறைகள் கம்பம்மெட்டு மலைச்சாலை 6வது கொண்டை ஊசி வளைவில் சரிந்து விழுந்தது. அந்த வழியாக சென்ற உத்தமபாளையம் வட்டாட்சியர் அர்ஜூனன், நெடுஞ்சாலை துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பின் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு மலைச்சரிவில் உருண்ட பாறைகளை அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது….

The post கம்பம்மெட்டு மலைச்சாலையில் பாறை சரிவு appeared first on Dinakaran.

Tags : Kampammetu mountain ,Kampammetu ,Keralai ,Dinakaran ,
× RELATED கம்பம்மெட்டு சாலையில் வாகனங்களை...