×

அமெரிக்காவில் உயிர்களை வேட்டையாடும் துப்பாக்கிகள்…6 மாதங்களில் 311 முறை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19,808 பேர் பலி!!

வாஷிங்டன் : நம் ஊர்களில் செல்போன் கடைகள் இருப்பது போலவே அமெரிக்காவில் சர்வ சாதாரணமாக துப்பாக்கி விற்பனையகங்கள் இருப்பதால் ஏதேனும் ஒரு இடத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது. கடந்த 6 மாதங்களில் அமெரிக்காவில் பள்ளி,கல்லூரிகள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் அப்பாவிகள் மீது துப்பாக்கியால் சுட்டு சிலர் வெறிசெயலில் ஈடுபடும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு இந்த வன்முறைகள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 6 இடங்களில் நடந்த துப்பாக்கிசூடு சம்பவங்களில் 6 பேர் பலியாயினர்.49 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில், அமெரிக்காவில் கடந்த 6 மாதங்களில் 311 முறை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19,808 பேர் உயரிழந்துள்ளனர் .இதில் 827 பேர் 17 வயதுக்கும் குறைவானவர்கள்; மேலும் 16,897 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சராசரியாக ஒரு துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் இறப்பதாக தற்போது வெளியாகி உள்ள தரவுகள் கூறுகின்றன. உலக மக்கள் தொகையில் 5%த்திற்கும் குறைவாக உள்ள அமெரிக்காவில் வேறு எந்த நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் 46% பொதுமக்கள் துப்பாக்கி வைத்துள்ளனர். உலக அளவில் துப்பாக்கிகள் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. இந்நாட்டில் 100 பேரிடம் 120 துப்பாக்கிகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்கிற அச்சமும் மேலெழுந்திருக்கிறது.

The post அமெரிக்காவில் உயிர்களை வேட்டையாடும் துப்பாக்கிகள்…6 மாதங்களில் 311 முறை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19,808 பேர் பலி!! appeared first on Dinakaran.

Tags : America ,Washington ,US ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...