×

சென்னையில் இருந்து கொண்டு மழை பாதிப்புகளை கண்காணிக்க அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை : அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்புள்ளது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன், “சென்னையில் நேற்று பெய்த மழை 73 ஆண்டுகளில் இல்லாத அளவாக பதிவாகி உள்ளது. 73 ஆண்டுகளில் 2வது முறையாக அதிக மழை பதிவாகி உள்ளது. சென்னையில் அதிக மழை பெய்தும் பெரிய அளவில் பாதிப்பில்லை. மழைநீர் வடிகால் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதால் பாதிப்புகள் குறைந்தன.

சென்னையில் 22 சுரங்கப்பாதையிலும் போக்குவரத்து சிரமமின்றி மக்கள் பயணித்து வருகின்றனர். சென்னையில் இன்று 90 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. முகாமில் ஒரு மருத்துவர், செவிலியர், உதவியாளர் மற்றும் இதர பொது சுகாதார பணியாளர்கள் பணியில் இருப்பர். காய்ச்சல், சளி மற்றும் இதர தொற்று நோய்களுக்கு மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 15 நகர்ப்புற சமுதாய நல மையங்கள், 140 ஆரம்ப சுகாதார நல்வாழ்வு மையங்களிலும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்புள்ளது. அறுவை சிகிச்சை செய்வதற்கான உடல் தகுதியை நேற்று இரவு பெற்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.காவேரி மருத்துவனையில் செந்தில் பாலாஜிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டின் அரசு மருத்துவர்கள், இந்தியா முழுவதும் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரது நேர்மைத் தன்மையை சந்தேகிக்கிறது அமலாக்கத்துறை;விசாரணையில் இருந்து காத்துக்கொள்ள யாராவது இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்வார்களா?. சென்னையில் இருந்து கொண்டு மழை பாதிப்புகளை கண்காணிக்க அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார். தொடர் மழை பெய்து வருவதால் கலைஞர் கோட்ட சிறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என முதலமைச்சர் கூறியுள்ளார்.அமைச்சர்கள் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சேகர்பாபு, மா.சுப்ரமணியனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

The post சென்னையில் இருந்து கொண்டு மழை பாதிப்புகளை கண்காணிக்க அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை : அமைச்சர் மா.சுப்ரமணியன் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,Minister Ma. Subramanian ,Minister ,Senthil Balaji ,Maa. Subramanian ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...