×

சீனியர் ஆண்களுக்கான ஹாக்கி திருச்சி கல்லூரி அணி சாம்பியன்

திருச்சி: திருச்சி மாவ ட்ட அளவிலான சீனியர் ஆண்களுக்கான ஹாக்கி சூப்பர்லீக் போட்டியில் திரு ச்சி ஜமால்முகமது கல்லூரி கோப்பையை வென்றது. ஹாக்கி திருச்சி மாவட்ட அளவிலான சீனியர் ஆண்களுக்கான சூப்பர் லீக் போட்டிகள் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. போட்டிகளின் முடிவில் ஜமால் முகமது கல்லூரி கோப்பையை வென்றது. ஜமால் முகமது கல்லூரி 1-0 என்ற கோல் கணக்கில் பிஷப் ஹீபர் கல்லூரியை வென்றது. பிஷப் ஹீபர் கல்லூரி 5-1 என்ற கணக்கில் ராக்போர்ட் அணியை வீழ்த்தியது, ஜமால் முகமது கல்லூரி 8-0 என்ற கோல் கணக்கில் மணப்பாறை மாஸ் அணியை வென்றது.

புள்ளி பட்டியலில் ஜமால் முகமது கல்லூரி முதலிடம் பிடித்தது. இரண்டாம் இடத்தினை பிஷப் ஹீபர் கல்லூரியும், மூன்றாம் இடத்தை ராக்போர்ட் அணியும், நான்காம் இடத்தை மாஸ் ஹாக்கி கிளப் மணப்பாறை அணியும் பிடித்தது. போட்டியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படை தளவாய் ஆனந்தன் பரிசுக்கோப்பை பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இவ்விழாவில் கருணாகரன் சென்ட்ரல் எக்சர்சைஸ் சூப்பர் ரெண்ட், பாலகிருஷ்ணன், பொருளாளர் பெனடிக் பிரபு, உதவி செயலர் ஆரோக்கிய செல்வன் பிரதீப், மற்றும் திருச்சி ஹாக்கி அமைப்பின் செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post சீனியர் ஆண்களுக்கான ஹாக்கி திருச்சி கல்லூரி அணி சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Trichy College ,Trichy ,Thiru Chi Jamal Muhammed College ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...