×

ஈரடுக்கு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கம்

சேலம்: சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தை கடந்த 11ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து நேற்று முதல், தரைதளம் மற்றும் முதல் தளத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டது. இதனை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் பாலச்சந்தர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, மின் விளக்கு, சுகாதாரம், லிப்ட், பயணிகள் அமருவதற்கான இருக்கை, சிசிடிவி கேமரா, காவலர்கள் அறை, பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தரை தளத்திற்கு வரும் மாநகர பஸ்கள், முதல் தளத்திற்கு வரும் பஸ்கள் குறித்த விவரங்கள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படுகிறதா, பஸ் நிலையத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டு பஸ்கள் குறைவான வேகத்தில் இயக்கப்படுகிறதா, தரை தளம் மற்றும் முதல் தளத்தில் எந்தெந்த ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது என்பது குறித்த பெயர் பலகைகள் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.தரைதளத்தில் இருந்து குருசாமிபாளையம், மகுடஞ்சாவடி, வைகுந்தம், ராசிபுரம், பாரப்பட்டி, மல்லசமுத்திரம், அன்னதானப்பட்டி, மல்லூர், ஆட்டையாம்பட்டி, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டினம், அக்கரைப்பட்டி, பேளூர், கன்னங்குறிச்சி, அடிவாரம்,அம்மாப்பேட்டை ஆகிய ஊர்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

முதல் தளத்தில் இருந்து இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, ஜலகண்டாபுரம், ஜங்சன், தாரமங்கலம், நங்கவள்ளி, வனவாசி, வெள்ளாளப்பட்டி, தின்னப்பட்டி, தொளசம்பட்டி, ஓமலூர், முத்துநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த ஆய்வின் போது, கண்காணிப்பு பொறியாளர் ரவி, துணை ஆணையாளர் அசோக்குமார், செயற்பொறியாளர் செந்தில்குமார், அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் கணேஷ்குமார், உதவி பொறியாளர் விவேகானந்தன், மாநகர போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post ஈரடுக்கு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Erudku Bus Station ,Salem ,Chief Minister ,M.K.Stalin ,Salem Erudku bus station ,Erudku bus ,station ,Dinakaran ,
× RELATED சேலம் ஏரியில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் சிக்கின