×

மதுரையில் மது விற்ற 7 பேர் கைது

மதுரை, ஜூன் 20: மதுரை மாட்டுத்தாவணி ஸ்டேஷன் சிறப்பு எஸ்ஐ குருசாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர். பாண்டிகோயில் ரிங்ரோடு பகுதியில் சென்ற போது, மறைவான இடத்தில் பதுங்கியிருந்த சிலர், போலீசாரை பார்த்ததும் ஓட ஆரம்பித்தனர். இதையடுத்து, போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியை சேர்ந்த சுரேந்திரன் (36), உத்தங்குடியை சேர்ந்த ராமன் (27), கச்சக்கட்டியை சேர்ந்த ரமேஷ் (35) என்பதும், டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இதேபோல், மதுரை மாநகர மதுவிலக்கு பிரிவு போலீசார் ஜி.எஸ்.டி. ரோடு, மேல மாரட்வீதி, ஆழ்வார்புரம், மறவர்சாவடி பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்த திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ரமேஷ்பாபு (50), வடக்கு மாசி வீதியை சேர்ந்த சொரி (63), அய்யணார்குளத்தை சேர்ந்த ராஜாமணி (53), பெத்தானியபுரத்தை சேர்ந்த ராஜா (47) ஆகியோரை கைது செய்தனர். கைதானவர்களிடமிருந்து மொத்தம் 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post மதுரையில் மது விற்ற 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Mattuthavani ,Station ,Special ,SI Guruswamy ,Dinakaran ,
× RELATED டிடிஎஃப் வாசன் தனது செல்போனை...