புதுக்கோட்டை: வேங்கைவயல் தலித்குடியிருப்பின் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் அரசு விரைவான நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்த் தேச இறையாண்மை என்ற அமைப்பின் சார்பில் புதுக்கோட்டையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயற்சித்ததாக நேற்று 10 பேர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே இந்தப் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில், அந்த அமைப்பின் செயலர் பாரி, உள்ளிட்டோர் சின்னப்பா பூங்கா பகுதியில் கூடினர். அப்போது அங்கிருந்த போலீசார் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் எனத் தெரிவித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து 10 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
The post வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்த முயன்ற 10 பேர் கைது appeared first on Dinakaran.
